தமிழக மக்களின் நன்கொடையின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 35,400 கிலோ கிராம் அரிசியும் 2000 கிலோ பால் மா.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 35,400 கிலோ கிராம் அரிசியும் 2000 கிலோ பால் மா என்பன தமிழக மக்களின் நன்கொடையின் கீழ்  இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் றூபதி  கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்திய மக்களின் இரண்டாம் கட்ட  நிவாரண உதவி பொருட்கள். இன்று (14-07-2022) கிளிநொச்சியை வந்தடைந்துடன் அவை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை மற்றும் பூனகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன
இன்று புகையிரத  பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட மேற்படி பொருட்கள்  மாவட்ட செயலகத்தின் ஊடாக பூநகரி மற்றும் கண்டாவளை  பிரதேச செயலர்  பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ்வாறு உதவி திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் இந்திய அரசினுடைய இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன அதில் 35,400 கிலோ கிராம் அரிசியும் 2000 கிலோ கிராம் பால் மாவும் கிடைக்கப்பெற்று இருக்கிறது அவற்றை  கண்டாவளை  மற்றும் பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கின்றதாகவும் நாளைய தினம் ஏனைய பிரதேச செயலகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews