புதிய அரசாங்கமொன்றை அமைக்கும் சந்தர்ப்பம் மக்களிடம் வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சமூக ஊடகங்களின் வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தவறினால் நாடாளுமன்றிற்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், நாடாளுமன்றம் உரிய முறையில் கூட்டப்பட்டு புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம் நிறுவப்பட வேண்டும்.
நாடாளுமன்றம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைய வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய 69 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்டது உண்மை என்ற போதிலும் தற்பொழுது அவரை நிராகரித்துள்ளனர்.
எவ்வாறெனினும், மக்களினால் நிராகரிக்கப்பட்டாலும் எதிர்காலம் தற்போதைய நாடாளுமன்றிலேயே தங்கியுள்ளது.எனவே குறுகியகால அரசாங்கமொன்றை அமைத்து நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க கருத்துக்களை முன்பவைத்தார்.