இன்றைய இலங்கை தீவின் அரசியல், பொருளாதார நெருக்கடியை தமிழ் மக்கள் சார்பாக சரியான விதத்தில் அணுக தமிழ் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும்……!குரு முதல்வர் அகத்தி அடிகளார்.

இன்றைய இலங்கை தீவின் அரசியல், பொருளாதார நெருக்கடியை தமிழ் மக்கள் சார்பாக சரியான விதத்தில் அணுக தமிழ் தேசிய கட்சிகள் முன்வர வேண்டும் என தென்கயிலை குரு முதல்வர் அகத்தி அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில்  மேலும் குறிப்பிட் பட்டதாவது
பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்று ஜனாதிபதி பதவி துறப்பிக்கச் செய்யப்பட்டு அரசியல் நெருக்கடி தீவின் ஆட்சி தலைமை தீர்மானிப்பதில் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கு சாதகமாக எமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு பயன்படுத்த அனைத்து தமிழ் தலைவர்களும் முன்வர வேண்டும்.
குறிப்பாக தற்போது தெரிவு செய்யப்படவுள்ள புதிய சனாதிபதியை தீர்மானிப்பதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் செல்வாக்கு செலுத்தும் என கருதப்படும் நிலையில் எம்மிடையே உள்ள பேதங்களை மறந்து ஒட்டுமொத்த இனத்தின் நலனை முன்னுறுத்தி தமிழ் தேசிய அடிப்படை கோட்பாடுகளின் நீண் கால மனிதநேய கோரிக்கைகளை முன்வைத்து வேட்பாளர்களிற்கு ஆதரவு வழங்குவதை  தீர்மானிக்கும் பேச்சுகளில் ஈடுபட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
1. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாதச் சட்டம் நீக்கப்பட வேண்டும்
2 நேரடியாக ஒப்படைத்து காணமல் போனோர் விவகாரத்தில் நீதியான தீர்வும் உரிய உடனடி நீண்ட கால நிவாரணங்களும் வழங்கப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும்.
3. வடகிழக்கு பொருளாதார நிதியம் புலம் பெயர் முதலீடுகளிற்கு பாதுகாப்பும் தங்கு தடையற்ற ஊக்குவிப்பும்
4. ஆக்கிரபமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிப்பும் தொல்பொருள், வன விலங்கு, மகாவலி ஆக்கிரமிப்பு வலய பிரகடனங்களை மீளப்பெறுதல்
5 தாயகம், சுயநிர்ணயம், அடிப்படையில் நிரந்த தீர்வும் முன்னதாக இடைக்கால நிர்வாக பரீசீலனை
இந்த விடயங்களில் மேலுள்ளவற்றிற்கு உடனடி இணக்கப்பாடும் நீண்ட கால தீர்வுகளிற்கு கொள்கை ரீதியான உடன்பாடும் தெரிவிக்கும் பேச்சு வார்த்தையை மேற்கொண்டே ஆதரவுத் தளத்தை தீர்மானிக்க அனைத்து தமிழ் கட்சிகளும் முன்வர வட கிழக்கின் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர் என்ற ரீதியில் மக்கள் சார்பாக கேட்டு நிற்கின்றோம்.
ஏற்கனவே ஏனைய தமிழ் ஆன்மீக தலைவர்கள் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் தங்களிடம் விடுத்துள்ள கோரிக்கைகளை மீள வலியுறுத்துவதோடு வாக்கெடுப்பின் பின்னர் தாங்கள் எடுத்த நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் எமது தேசிய அடிப்படை வேலைத் திட்டத்தை இளையவர்கள், நிபுணர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளீர்த்து புதிய பாதையில் பிரயாணித்து தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளை வென்றெடுக்கவும் உடனடி மனிதாபிமான பிரச்சனைகளை தீர்க்கவும் இறையாசியை வேண்டி நிறைவு செய்கின்றோம்.
தவத்திரு .அகத்தியர் அடிகளார்
தென்கயிலை ஆதீனம்
திருகோணமலை

Recommended For You

About the Author: Editor Elukainews