கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார் – சமந்தா பவர்.

மக்கள் எழுச்சி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலை குறித்துப் பேசிய பவர், வீழ்ச்சியடையும் கடைசி அரசாங்கமாக இலங்கை இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், ஊழல் மற்றும் பணவீக்கத்தின் கலவையால் தூண்டப்பட்ட மக்கள் எழுச்சி இலங்கையின் ஜனாதிபதி பதவி விலகித் தப்பி ஓட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வரலாறு ஏதேனும் வழிகாட்டியாக இருந்தால், அது கடைசியாக வீழ்ச்சியடையும் அரசாங்கமாக இருக்காது” என்று அவர் மேலும் கூறினார்.

உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் மோசமான பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் எடுக்கும் தைரியமான நடவடிக்கைகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் பொது-தனியார் முதலீட்டைத் தொடரும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகளும் இதில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews