இலங்கை முதலுதவி சங்கத்தினரின் சேவையை பாராட்டி நயினை நாகபூசணி அம்மன் ஆலய பரிபாலன சபையினரால் இலங்கை முதலுதவி சங்க நிருவாகிகளையும் தொண்டர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு ஆலய தேர் உற்சவத்தன்று இடம் பெற்றுள்ளது.
நயினை நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவை ஆற்றியமைக்காகவும், பிற ஆலயங்களில் தொண்டாற்றியமைக்காகவுமே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
இதில் இலங்கை முதலுதவி சங்க ஆணையாளர் வை.மோகனதாஸ், தேசிய கண்காணிப்பாளர் வை.ஜெகதாஸ் உட்பட பலருக்கும் சான்றிதழ் வழங்கி ஆலய முன்றலில் கௌரவிக்கப்படமை குறிப்பிட தக்கது.