நாடாளுமன்றில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ருவிட்டரில் பதிவொன்றை இட்டு, அதில் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைக்குமாறு கோரியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நாடாளுமன்றம் இன்னும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது தனது ஆணையை இழந்துவிட்டது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று நான் மீண்டும் கூறுகின்றேன்.
அனுரகுமார திசாநாயக்க நல்ல ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது டளஸ் அழகப்பெருமவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 113க்கும் அதிகமாகும்.
அவ்வாறிருக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?’ என பதிவிட்டுள்ளார்.