காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 12 பிரிவுகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு பின் இன்று சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.
காரைதீவு மாளிகைக்காடு மாவடிப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட வினியோக அட்டையின் கீழ் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் எரிவாயு சிலின்டர்கள் வழங்கப்பட்டது.
சம்மாந்துறைப் பொலிசாரின் கண்காணிப்பில் பிரதேச குடியிருப்பாளர்கள் மிகவும் அமைதியான முறையில் எரிவாயு சிலின்டர்களை பெற்றுக் கொண்டனர்.