மட்டு.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்.

எரிபொருள் நிலையத்தில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதலை கண்டித்து கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இன்று நண்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய வைத்தியர்கள் மற்றும் சுகாதார துறையினை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெகியத்தன்கண்டி என்னும் இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பச்சென்ற வைத்தியரும் சுகாதார ஊழியரும் பொதுமக்களினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை கண்டித்தும் சுகாதார துறையினர் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைதுசெய்யக்கோரியும் சுகாதார துறையினர் எரிபொருட்களைப்பெற்றுக்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள்,சுகாதார ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தும் வகையிலான கோசங்களையும் எழுப்பினர்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews