விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினரின் ஏற்பாட்டில், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தின் தலைவர், வெ. ஜெயநாதன் தலைமையில், இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு, இராமகிருஷ்ண மிஷன், உதவிப் பொது முகாமையாளர்,. ஸ்ரீPமத் நீலமாதவானந்தஜீ மஹராஜ் சுவாமிகள் திருமுன்னிலை வகிக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. வே.ஜெகதீஸன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.காரைதீவு தவிசாளர், பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட வலயக் கல்விச் சமூகத்தினர், பாடசாலை அதிபர்கள், நற்பணி மன்ற நிறுவுனர்கள், அறங்காவலர் ஒன்றிய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
விபுலாநந்த மத்திய கல்லூரி, கமுஃ இராமகிருஷ்ண மிஷன் ஆண்கள் பாடசாலை, கமுஃ கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்கள் பங்குபற்றலுடன் சுவாமி விபுலாநந்தரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்வலம் பிரதான வீதி ஊடாக, கண்ணகி அம்மன் ஆலயம் முச்சந்தியை அடைந்து, சுவாமி விபுலாநந்தரின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தரின் இல்லத்தில் குருதேவருக்கான பூசை வழிபாடுகள் மற்றும் சுவாமிகள் திருவுருவச் சிலைக்குப் பூமாலை அணிவித்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து,
ஞாபகார்த்த மணி மண்டபத்தில் சுவாமி விபுலாநந்தரின் திருவுருவப்படம் திறந்து வைத்தல், தேவாரம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, ஆசியுரை மற்றும் தலைமை உரைகளினைத் தொடர்ந்து, சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள், இந்து கலாசார ஒன்றிய அறநெறிப் பாடசாலை மற்றும் முருகன் ஐக்கிய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சு நிகழ்வுகள், சிறப்புரைகள், பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றன.