இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் விசேட கூட்டத்தின் போது இந்தியாவின் பெயர் சொல்லக்கூடிய உயர் அதிகாரியொருவர் அழைப்பினை ஏற்படுத்தி ஜனாதிபதி தெரிவு தொடர்பில் தலையிட்டுள்ளமை தவறான விடயம் என அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த அழைப்பின் மூலம் சம்பந்தன்,சுமந்திரனின் முடிவை பின்பற்றுமாறு ஏனைய தலைவர்களிடமும் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இருப்பினும் அழைப்பினை ஏற்படுத்தியவர் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் நகர்வானது தற்போது தங்களது சொந்த விடயங்களுக்காக இந்திய தூதரகத்தையும் சம்பந்தப்படுத்தி அரசியல் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.