ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க என்பவர் மற்றுமொரு ராஜபக்ச” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் நிலைப்பாடு இதன்போது கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய அல்லது அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு எங்களுடைய மக்களின் நிலைப்பாட்டை அங்கீகரிக்கக் கூடிய விதத்திலே செயல்படுகின்ற ஒரு அரசியல் தலைவரை நாங்கள் ஆதரிப்பதாக ஏற்கனவே மத்திய குழுவில் கலந்துரையாடி இருந்தோம்.
சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் எமது தலைவருடன் தொடர்பினை ஏற்படுத்தி தங்களை ஆதரிக்கும்படி கேட்டிருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை: தர்மலிங்கம் சுரேஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துரையாடி எமது மக்களுடைய நிலைப்பாட்டினை தெளிவாக கூறி இருந்தார்கள்.
எமது மக்களுடைய தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் அவ்வாறு ஒத்துழைக்கும் பட்சத்தில் மாத்திரமே எங்களுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும் என்பதை மிகத் தெளிவாக கூறி இருந்தார்கள்.
இந்தக் கோரிக்கைகளை இவர்களிருவரும் நிராகரித்தமையினால் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி இருந்தோம்.
யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யக்கூடியவரை ஆதரிப்போம்.
இதுதவிர வெறுமனே தங்களுடைய பதவி நலனுக்காக எமது மக்களை பயன்படுத்தி எங்களுடைய மக்கள் பிரதிநிதிகளை பயன்படுத்துவதில் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஒவ்வொரு அரசாங்கங்களும் எமது மக்களை ஏமாற்றியது
கடந்த 72 வருடங்களாக எங்களுடைய மக்களின் இருப்புகளை தக்க வைப்பதற்காக ஜனநாயக வழியிலும் ஆயுத ரீதியாகவும் போராடி 2009 மே18 மிகப்பெரிய இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதற்கு பின்னர் வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் எமது மக்களை ஏமாற்றி நமக்கு நடந்த அநியாயத்தையும் இனப் படுகொலையையும் நீர்த்து போகும் முகமாக அவர்கள் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.
2009ஆம் ஆண்டிற்கு பிற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களுடைய ஆணையைப் பெற்று இந்த மண்ணிலே இருக்கின்ற தமிழர்களுக்கு விசுவாசமாக நடக்காமல் அந்த மக்களுடைய ஆணைகளுக்கு செவிசாய்க்காமல் வெறுமனே சில நாடுகளுடைய இந்தியா போன்ற நாடுகளின் நலன்களுக்கு மட்டுமே தங்களுடைய சேவகங்களை செய்து வந்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதி தெரிவின் போது வெளிப்படையாக மக்கள் அறிந்திருக்கின்றார்கள் இதுவரை காலமும் இவர்கள் இவ்வாறுதான் நமது மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். வெறும் பொய்களைக் கூறிக் கொண்டு ராஜதந்திரம் அல்லது நல்லிணக்கம் அல்லது சிங்கள மக்கள் கோபப்படுவார்கள் என்றெல்லாம் கதை கட்டிக்கொண்டு இதுவரை எமது மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றார்கள்.
ஆனால் நேற்றைய தினம் இவர்கள் கையும் மெய்யுமாக அம்பலப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய முடிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை என்றும் விட்டுக் கொடுக்காது. எங்களைப் பொறுத்த அளவில் ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை: தர்மலிங்கம் சுரேஸ்
ரணில் விக்ரமசிங்க என்பவர் அவர் மற்றுமொரு ராஜபக்ச அந்த அடிப்படையில் எமது மக்களைப் பொருத்தளவில் எந்த ஒரு அரசியல் தலைவர்களிடமும் நம்பிக்கையில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தகால அரசியல் என்பது தமிழ் மக்களை முற்றுமுழுதாக ஏமாற்றி தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்ததில் மிகப்பெரிய பங்கு இவருக்கு உள்ளது.
தற்போது இருக்கின்ற நாடாளுமன்றம் மக்களின் ஆணையை இழந்த நாடாளுமன்றம் எனவே இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அந்த அடிப்படையிலேயே எமது மக்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தலைவர்கள் தயாரில்லாத இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு எங்களைப் போன்று இந்த நிலைப்பாட்டை நிராகரித்து இருக்க வேண்டும்.
இவர்கள் கூறுகின்ற விடயம் உண்மையாக இருந்தால் இந்த ஜனாதிபதி தெரிவில் அவர்கள் நிராகரித்து இருக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் வெளிப்படையாக கூறியிருக்கின்றார் தங்களால் நிறுத்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும என இவருக்குதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுடைய ஆதரவினை தெரிவித்து இருந்தது.
மக்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் மக்களினால் இந்த ராஜபக்ச குடும்பம் விரட்டி அடிக்கப்பட்டு அதனுடைய கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு துரத்தப்பட்டு இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திலேயே மக்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கின்ற ஒரு ராஜபக்ச குடும்பத்தினால் நிறுத்தப்பட்டிருக்கின்ற அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியிருப்பது என்பது எந்த முகத்தை கொண்டு செய்தார்கள் என்பதை மக்கள் சரியான விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.