யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரச வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறிய
அரச வாகனம் வீதியில் சடுதியாக நுழைந்த நிலையில் பிரதான வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கட்டுப்படுத்த முடியாமல்
அரச வாகனம் மீது மோதியதாக சம்பவத்தை நோில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதேவேளை சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.