கனடாவில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை – தமிழர் கைது.

கனடாவில் Scotiabank அரங்கிற்கு வெளியே டொராண்டோ நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

26 வயதான நிருசன் ஷேக்ஸ்பியர்தாஸ் என்பவரை கைது செய்யப்பட்டு, புதன்கிழமை டொராண்டோ நீதிமன்ற அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக டொராண்டோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை மாலை யோர்க் ஸ்ட்ரீட் மற்றும் ப்ரெம்னர் பவுல்வார்டு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இரவு 7.30 மணிக்குப் பின்னர் டொராண்டோ பொலிஸார் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.

டொராண்டோவைச் சேர்ந்த 24 வயதான ஸ்டீபன் லிட்டில்-மெக்லாக்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் ஸ்டேஷனுக்குள் ஓடியதால், சனிக்கிழமை இரவு யூனியன் ஸ்டேஷனை இரண்டு மணி நேரம் மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அந்த நேரத்தில், மற்றொரு சந்தேக நபர் தெற்கே லேக் ஷோர் பவுல்வார்டை நோக்கி ஓடினார் என்று பொலிஸார் தெரிவித்தனர், ஆனால் அவர்கள் இப்போது ஷேக்ஸ்பியர்தாஸைத் தவிர வேறு யாரும் இதில் ஈடுபட்டதாக நம்பவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்த விசாரணையில் ஒரு சந்தேக நபர் மட்டுமே தேடப்படுகிறார்,” என டொராண்டோ பொலிஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஹாப்கின்சன் புதன்கிழமை ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தார். லிட்டில்-மெக்லாக்கன் இந்த ஆண்டின் டொராண்டோவின் 38வது கொலைப் பலியாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews