புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலக நேரிடும் என்று கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர் டுவிட்டர் பதிவொன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினரால் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவொன்றை மேற்கோள் காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் குறித்த டுவிட்டர் பதிவினையும் உடடினயாக நீக்க வேண்டும் எனவும் மஹேல ஜெயவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
இந் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் குறித்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது,
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்கின்றோம் எனவும், பிரதமர் மாத்திரமல்ல முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
எனவே தற்போது ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று 24 மணிநேரம் நிறைவடைவதற்குள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டியே மஹேல ஜெயவர்த்தன தமது டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.