வன்முறையை கட்டவிழ்த்துக்கொண்டு உலகநாடுகளிடம் எவ்வாறு உதவிகோருவது – சட்டத்தரணி உபுல்குமர பெரும.

வன்முறையை கட்டவிழ்த்துக்கொண்டு உலகநாடுகளிடம் எவ்வாறு உதவி கோருவது என்று சட்டத்தரணி உபுல்குமர பெரும தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாடு மிகவும் மோசமான அராஜக நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டை முன்கொண்டு நடத்துவதற்கான பணம் நாட்டில் தற்போது இல்லை.

நாட்டை முன்கொண்டு செல்வதற்கான வெளிநாட்டு கடனை பெற்றுக்கொள்வத்காகவே நாட்டின் ஆட்சியாளர்கள் இதுவரை முயற்சித்து வந்தனர்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களிலும் ஆட்சியாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் அதேபோன்று நமது நாட்டுக்கு கடன் வழங்கும் வெளிநாடுகள் எமது நாட்டின் ஆட்சியாளர்களிடம் தொடர்ச்சியாக கோரும் ஒரு விடயம் உள்ளது.

அதாவது நாட்டில் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறே அந்த நாடுகள், சர்வதேச நிதி வழங்கல் நிறுவனங்கள் கோரி வருகின்றன.

அடிப்படை உரிமைகள், அதேபோன்று மனித உரிமைகளுககு மதிப்பளியுங்கள் என்றும் உலக நாடுகள் கூறி வருகின்றன.

அதேபோன்று நாட்டில் ஸ்திரமான ஒரு அரசாங்கத்தை கட்டியெழுப்புமாறும் உலக நாடுகள் கோரி வருகின்றன.

இவ்வாறான நிலையில் கொழும்பு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலினூடாக உலக நாட்டுக்கு எவ்வாறான செய்திகளை நமது நாடு வழங்கியுள்ளது.

எமது நாடு இன்றும் பழங்கால அல்லது ஒரு முறையான ஆட்சிமுறைக்குள் வராத நாடு என்பது மட்டுமே சர்வதேசத்துக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் நமது நாட்டுக்கு கடன் வழங்குமாறு நாம் எவ்வாறு உலக நாடுகளிடம் பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியும்.

Recommended For You

About the Author: Editor Elukainews