அனைத்து வெகுஜன தொழிற்சங்கங்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றை ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் திட்டவட்டமான புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என்றும் அதற்காக தேசிய பேரவை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்து முன்னாள் பிரதமரையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பின்னர் எழுந்த மாற்று அணி முன்னைய நிலையை விட பாரதூரமானது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.