கிளிநொச்சி அக்கராயன் குளம் பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் பெற்றோல் கிடைக்க பெற்றுள்ளதையடுத்து கடைசி இலக்கங்களுக்கு அமைவாக பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்தில் உள்ள பொது மக்களின் அத்தியாவசிய சேவைகள், மற்றும் விவசாய நடவடிக்கை என்பவற்றுக்கான எரிபொருள் நெருக்கடியை தீர்க்கும் வகையில் எரிபொருள் வழங்கி வந்த அக்கராயன் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்துக்குரிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெற்றோல் கிடைக்காத நிலையில் குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் 60 கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தமக்கான பெட்ரோல் பெற வேண்டிய நிலை காணப்பட்டது
இந்த நிலையில் நேற்று ( 24-07-2022) பெற்றோல் கிடைக்கப்பெற்று அக்ராயன் பிரதேசத்துக்கு உட்பட்ட மக்களுக்கு வாகனங்களின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர், தலைவர், அக்கராயன்குளம் போலீசாரின் ஒழுங்குபடுத்தலில் எரிபெருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.