விவசாயத் துறையின் வேலைவாய்ப்பிற்காக இலங்கை பணியாளர்களுக்கு வாய்ப்பளிக்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை விசேட திறன்களுடன் கூடிய தொழில் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு உணவு குடிபானத் துறையிலும், தூய்மைப்படுத்தல் துறையிலும் மாத்திரமே தொழில் வாய்ப்புக்கள் கிடைத்து வந்தன.
எதிர்காலத்தில் ஜப்பானின் விவசாயத்துறையில் தொழில் புரிவதற்காக பணியாளர்களை அனுப்பி வைக்க தற்போது சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
விவசாயத் துறையில் தொழில்புரிவதற்காக ஜப்பான் மொழி தேர்ச்சிக்கு மேலதிகமாக தொழில் தகைமையும் அவசியமாகும்.
17 வயதிற்கு மேற்பட்ட தகுதிபெற்ற பணியாளர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். ஒரு மாதத்திற்கு 150 பேர் பரீட்சைக்கு தோற்ற முடியும். பரீட்சைக் கட்டணம் மூவாயிரத்து 500 ஜப்பான் யென்களாகும்.