நாட்டில் மீண்டும் மட்டுப்படுத்தப்படவுள்ள எரிபொருள் வழங்கல் அளவு.

எாிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஒவ்வொரு ரக வாகனங்களுக்குமான எரிபொருள் விநியோக அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை வகை பிரித்து அவற்றின் பாவனைத் தேவைக்கு ஏற்ப எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு வாராந்தம் 40 லீற்றர் டீசல், முச்சக்கர வண்டிகளுக்கு வாராந்தம் 05 லீற்றர் பெட்ரோல், இருசக்கர வாகனங்களுக்கு வாரமொன்றுக்கு 04லீற்றர் பெட்ரோல் என விநியோக அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் கார்/ வேன் என்பவற்றுக்கு வாராந்தம் 15 லீற்றர் பெட்ரோல் அல்லது டீசலைப் பெற்றுக்கொள்ள முடியும்.  சரக்குகளை ஏற்றிச் செல்லும் லொறிகளுக்கு மட்டும் வாரமொன்றுக்கு ஐம்பது லீற்றர் வரையிலான டீசல் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம்

யாழில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, 27.07.2022 அன்று குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews