சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறும் ரஸ்யா.

2024 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி சொந்த நிலையத்தை உருவாக்கப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் விண்வெளி நிறுவன புதிய தலைவர் யூரி போரிசோவ் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏனைய நாடுகளுடன் இணைந்து 1998 முதல் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்து பணியாற்றி வருகின்றன. ஆனால் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இந்த உறவுகள் மோசமடைந்துள்ளன. மேலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக திட்டத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா முன்னர் அச்சுறுத்தியது.

ஐஎஸ்எஸ் – என்ற ஐந்து விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டு திட்டம் – 1998 முதல் பூமியைச் சுற்றி வருகிறது மற்றும் ஆயிரக்கணக்கான அறிவியல் சோதனைகளை நடத்த பயன்படுத்தப்பட்டது. இது 2024 வரை இது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் உடன்படிக்கையுடன் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு அதை நீடிக்க அமெரிக்கா விரும்புகிறது.

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பின் பின்னரே, 2024 க்குப் பிறகு திட்டத்திலிருந்து வெளியேற முடிவு எடுக்கப்பட்டதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவன புதிய தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் அமெரிக்க விண்வெளி நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews