அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசலை ஊழியர்கள் தமக்கு நேர்த்தியான நடவடிக்கையின் கீழ் பெற்றோலை விநியோகிக்குமாறு வலியுறுத்தி நேற்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த காலங்களில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்கப்படவில்லை என்பதுடன் வெள்ளிக் கிழமைகளில் சுகாதார உத்தியோகஸ்தர்களுக்கு பெற்றேல் வழங்கப்படுவதாக அறிவித்திருந்தும் சாய்ந்தமருது வைத்தியசாலை ஊழியர்கள் ஐந்து பேருக்கு மாத்திரமே பெற்றோல் வழங்கியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 74 உத்தியோகஸ்தர்களில் 42க்கு மேற்பட்டவர்கள் வெளியிடங்களிலிருந்து கடமைகளுக்கு சமூகமளிப்பவர்கள் எனவே
உத்தியோகத்தர்களது கடமைகள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு நேர்த்தியான முறையில் எரிபொருள் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அரசாங்க தாதியர் உத்தியோகஸ்தர் சங்கத்தின் உபதலைவர் பி.எம்.நர்ஸ்சுடீன் ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து வெளியிட்டார்.