வெலிக்கடை படுகொலையின் 39 ம் ஆண்டு நினைவேந்தல்….!

1983ஆம் ஆண்டு ஆடி மாதம் 25,27 திகதிகளில் சிங்கள காடையர்களால் வெலிக்கடை வெஞ்சிறையில் வஞ்சகமான முறையில் அடித்தும், குத்தியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி,முன்னணி போராளிகளான ஜெகன்,தேவன் மற்றும் போராளிகள், பொது மக்கள் என 53 பேர்கள் உட்பட இலங்கை முழுவதும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தால் தமிழர்களின் கோடான கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டும் தீயிட்டும் அழிக்கப்பட்டது.!! இன வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட தலைவர்கள்,போராளிகள், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களையும் நினைவு கூர்ந்து யாழ் மாவட்ட ரெலோ அலுவலகத்தில் இன்று அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது,அஞ்சலி நிகழ்வில் மெளன வணக்கத்தினை தொடர்ந்து பொதுச்சுடரினை ரெலோவின் நிதிச் செயலாளரும்,அரசியல் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் ஏற்றி வைக்க, ரெலோவின் யாழ் மாவட்ட துணை அமைப்பாளரும் யாழ் மாநகர துணை மேயருமான து.ஈசன்,ரெலோவின் யாழ் மாவட்ட இளைஞர் அணித் தலைவரும் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளருமான இ.ஜெயகரன்,ரெலோவின் நல்லூர் தொகுதி அமைப்பாளரும் நல்லூர் பிரதேசசபை உறுப்பினருமான கு.மதுசுதன்,ரெலோவின் யாழ் பணிமணை பொறுப்பாளரும் யாழ் நகரப்பகுதி பொறுப்பாளருமான மு.உதயசிறி,ரெலொவின் சிரேஷ்ட உறுப்பினரான ஆனந்தன் ஆகியோர் சடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரையும் இடம் பெற்றது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews