மண்ணெண்ணெய் இன்மையினால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஜூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடபகுதியை பொறுத்தவரை எரிபொருள் பிரச்சினை ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது. கடந்த ஆனி மாதம் 30 ம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதற்கு பிற்பாடு எந்தவிதமான மண்ணெண்னையும் வழங்கப்படவில்லை.
டீசல் வாரத்திற்கு ஒருமுறை வழங்கபடுகின்றது. கடற்தொழில் அமைச்சரின் முயற்சியின் பயனாக மயிலிட்டி துறைமுகத்தில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு 2000 லீட்டர் டீசல் வழங்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மீனவ தொழிலாளர்களும் மண்ணெண்ணெய் இல்லாததன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக எரிபொருள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது.
இந்த எரிபொருள் இல்லை என்றால் இந்த நாடே முடங்க வேண்டிய நிலை காணப்படும் தற்போது நாட்டில் அனைவருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.
எரிபொருள் மாத்திரமே மீனவர்களை பொறுத்த வரைக்கும் முக்கியமானது.டீசல், மண்ணெண்ணெய் எமக்கு தேவையாக உள்ளது.
எனவே இந்த அரசாங்கமானது உரிய மண்ணெண்னையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடக்கு மீனவர்கள் தமிழ் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.