பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய (12) குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெட்ரோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
அதன்படி, பெட்ரோலிய இறக்குமதிக்கு முறையாக அடையாளம் காணப்பட்ட தரப்பினர்களுக்கு உரிமம் வழங்க முடியும்.
ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இது தொடர்பான சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படவுள்ளது.