மாவடி பராசக்தி விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும்….!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மாவடி பராசக்தி விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய  தினம் (13) பிற்பகல் 3.00 மணியளவில் மாவடி பராசக்தி விளையாட்டு கழகத்தினுடைய தலைவர் மகாலிங்கம் முருகையாதலைமையில் இடம்பெற்றது.
 இதில் முதல் நிகழ்வாக பிரதமர். சிறப்பு.கௌரவ விருந்தினர்கள் வீதியிலிருந்து விளையாட்டு மைதான அரங்கு  வரை மலர் மாலை அணிவித்து மேலைத்தேச இசை  அணிவகுப்புடன் வரவழைக்கப்பட்டு மங்கல விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டன.
மங்கல  விளக்குகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட  அபிவிருத்திக் குழுவின் தலைவருமாகிய அங்கஜன் ராமநாதன்.  சிறப்பு விருந்தினர்களான சமரவாகு  கிராம உத்தியோகத்தர் கு.சந்திரமோகன். வல்வெட்டித்துறை மத்தி கிராமசேவையாளர் எஸ்.பி சாந்தரூன். சமரவாகு.  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தர்சினி முகுந்தன்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.விக்கினேஸ்வரன் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மஞ்சுளா கமலஹாசன். கௌரவ விருந்தினர்களாக  வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை அதிபர் க.மனோகரன். ஓய்வுநிலை அதிபர் கி.இராசதுரை.  மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பா.முகுந்தன் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் செ.ஜெயராசா உட்பட பலரும் ஏற்றிவைத்ததை  தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாானது. அதனைத் தொடர்ந்து வெற்றியீட்டியோருக்கான பரிசில்களும் பிரதம. சிறப்பு. கௌரவ விருந்தினர்களால்  வழங்கப்பட்டன.
இதேவேளை கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய பலரும்  கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து  கருத்துரைகளை பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில்  குறித்த கிராம மக்கள் அயல் கிராம மக்கள் விளையாட்டு வீரர்கள் நலன் விரும்பிகள்  என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews