உடுவில் ஆலடி முகாம் பகுதியில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை (14) மாலை 4 மணியளவில் அனுஷ்டிக்க ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர்.
உடுவில் ஆலடி முகாம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் உலருணவு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந் நினைவேந்தலை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்று கூறி அங்கு குழப்பத்தில் ஈடுபட்டதுடன் ஊடகவியலாளர்களை செய்தி சேகரிக்கவும் அனுமதிக்கவில்லை.
மேலும், அப்பகுதியில் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அவதானிக்க முடிந்தாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு ஏற்பட்ட குழப்பம் வாய்த்தர்க்கமாக மாறிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட கட்சி உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
”பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் இராணுவ புலனாய்வினர் திட்டமிட்ட செயலே செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் குழப்பத்திற்கு காரணம்” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அங்கு கருத்து தெரிவித்துள்ளார்.