முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை டீசல் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த டீசல் தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 கொள்கலன்களில் இருந்து ஆயிரத்து 600 லீற்றர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.