தேசிய எரிபொருள் அட்டைக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு எரிபொருளை வழங்க மறுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது நடவடிக்கை!

தேசிய எரிபொருள் அட்டைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் அளவை வழங்க மறுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யாழ்.பிராந்திய முகாமையாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு நேற்றய தினைம் மாலை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சென்றிருந்ததுடன், அங்கு யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

பின்னர் தேசிய எரிபொருள் அட்டைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள எரிபொருள் அளவை எரிபொருள் நிரப்பு நிpலையங்கள் வழங்குவதில்லை. என பொதுமக்கள் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதிலளித்த பிராந்திய முகாமையாளர் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் QR திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாத நிலையங்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews