குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 3 வாடிகள், 25 குதிரை வலு கொண்ட 3 மீன்பிடி இயந்திரங்கள், பெறுமதிமிக்க நண்டு, சூடை, கிளைக்கன் மீன் வலைகள் போன்ற பல பெறுமதியான பொருட்கள் என்பன தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
சம்பவ தினத்திற்கு முதல்நாள் தனி நபர் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த நபர் இந்த நாசகார வேலையை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அங்கு உரிய நீதி கிடைக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நேற்றைய தினம் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிடுவதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.
கடந்த புரேவிப் புயல் பாதிப்பு, கோவிட் தோற்றால் தொழில் இழப்பு காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தொழில் செய்வதற்கு கடன் அடிப்படையில் பெறப்பட்ட உபகரண பொருட்களையே விஷமிகள் தீயிட்டு கொளுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய பொருளாதார, எரிபொருள் தட்டுப்பாடு காலத்தில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான நிலை என்ன எனவும், பொலிஸாரும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் தங்களுக்கு நீதியை பெற்று தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.