பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வைப்பு அல்லது விற்பனை செய்வதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொதுமன்னிப்புக் காலம்
பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வங்கித்தொழில் முறைமையினுள் கவர்ந்து கொள்ளும் பொருட்டு, வெளிநாட்டு நாணயத்தாள்களை உடமையில் வைத்திருக்கின்ற இலங்கையிலுள்ள அல்லது இலங்கையில் வதிகின்ற ஆட்களுக்காக நிதி அமைச்சர், 2022.08.15 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு மாத பொதுமன்னிப்புக் காலத்தினை வழங்கும் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்போருக்கான அறிவுறுத்தல்
குறித்த உத்தரவின் படி, வெளிநாட்டு நாணயத்தை வைத்திருப்பவர்கள் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் ஏற்புடையவாறு வைப்பிலிட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கு (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) விற்பனை செய்ய ஒரு மாத பொதுமன்னிப்புக் காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.