திருட்டு மாட்டை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்.

திருட்டு மாட்டை கொண்டு சென்ற இருவர் தப்பியோடிய நிலையில் மாட்டை மீட்ட  சம்பவம் மீசாலையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 19.08.2022 நள்ளிரவு 12.15 மணியளவில் மீசாலை வடக்கு எல்லை வீதியால் பசு மாடொன்றை இருவர் சேர்ந்து நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட ஊரவர்கள் யாருடைய மாடு எங்கே கொண்டு போகிறீர்கள் என விசாரித்துள்ளனர்.

சரியாகப் பதிலளிக்காமல் இருவரும் மாட்டைக் கைவிட்டு சைக்கிளில் வந்த மற்றவருடன் சேர்ந்து ஓடித் தப்பியுள்ளனர். ஒருவர் தாடி வைத்திருந்த உயரம் குறைந்தவர் எனவும் மற்றையவர் சற்று உயரமானவர் எனவும் தெரிய வருகிறது.

மாட்டைப் பிடித்த ஊரவர்கள் அதனை கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்பு அந்த மாடு மந்துவிலை சேர்ந்த பெண்ணொருவருடையது எனவும் முதல் நாள் திருடப்பட்டதாகவும் அறிய வருகின்றது.

தொடர் மாடு திருட்டால் அதிர்ச்சி யடைந்துள்ள கால்நடை வளர்ப்பாளர்கள், திருட்டுகளை கண்டுபிடிப்பதில் பொலிசார் அசண்டையீனமாக செயற்படுவதாகவும் தொடர் திருட்டுக் குற்றவாளிகளை கூடிய விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருடர்கள் மாட்டை கொண்டு சென்ற வீதிகளில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கமராக்கள் உள்ளவர்கள் திருட்டுக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுமாறு கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin