உள்ளக சதி, வல்வெட்டித்துறை நகரசபை கூட்டமைப்பிடமிருந்து பறிபோனது…..!

வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து நேற்று பறிபோயுள்ளது.
வெற்றிடமாகவிருந்த நகரசபை தவிசாளர் பதவிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் சுரேஸ்பிரேமச்சந்திரன் அணியைச்சேர்ந்த இராமச்சந்திரன் சுரேன் குலுக்கல் முறையில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெறிதாகிய பதவிக்கான தேர்தல் நேற்று காலை 9.30 மணிக்கு வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலமையில் இடம்பெற்றது.
இதன்போது 17 உறுப்பினரைக் கொண்ட நகர சபையில் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியைச்சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சமுகமளிக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் க.சதிஸ் மற்றும் தமகழர் விடுதலைக் கூட்டணியின்  இ.சுரேன் ஆகியோர்  போட்டியிட்டனர்.
சதிஸ் சார்பாக த.தே.கூட்டமைப்பின் 6 உறுப்பினர், காங்கிரஸ் 2 உறுப்பினர் என 8 பேர் வாக்களித்தனர்.
சுரேன் சார்பாக சுயேட்சை 4 பேர் ஈபிடிபியின் 2 உறுப்பினர் சுதந்திரகட்சியின் 1 உறுப்பினர், மற்றும் சுரேன் ஆகிய 8 பேர் வாக்களித்தனர்.
இதனால் சமனிலையில் வாக்களிக்கப்பட்டதால் குலுக்கல் முறை மூலம்  சுரேன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்தேசியக்கூட்டமைப்பிடம் பெரும்பான்மையாக 9 உறுப்பினர் இருத்தும் ரெலோ, தமிழரசு, உள்ளக முரண்பாட்டால் தமிழரசின் ஒரு உறுப்பினர் சமூகமளிக்காததன் காரணமாக  சுரஏன்  வெற்றிபெற்றுள்ளார்.
இதுதொடர்பில் சபை முடிவில் ரெலோவின் செயலாளர்நாயகம் கோவிந்தன் கருணாகரன் வெளிப்படையாக தமிழரசின் ஒரு சிலரின் சதி நடவடிக்கையாலேயே தோற்கடிக்கப்பட்டோம் என கூறியிருந்தமையும் குறிப்பிடதக்கது

Recommended For You

About the Author: admin