மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ள குடத்தனை உப தபாலகம். ஊழல்வாதிகளுக்கு உயரதிகாரிகள் அடைக்கலம், முதியவர்கள் பாதிப்பு, மக்கள் விசனம்…!

திங்கள் கிழமை முதல் குடத்தனை உபதபாலகம் மூடப்பட்டுள்ளமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுசன மாதாந்த கொடுப்பனவு பெறுவதற்க்காக தள்ளாடும் வயதிலும் குறித்த உபதபாலகத்திற்க்கு வருகை தந்து மூன்று நாட்களாக பசியோடும் பட்டிணியோடும்  காத்திருக்கின்றனர்.

குடத்தனை உபதபாலகருக்கு எதிராக இதுவரை 12 முறைப்பாடுகள் பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மின்சார பட்டியலுக்கு பணம் செலுத்த கொடுத்த பணத்தை மோசடி செய்தமை, தேசிய சேமிப்பு வங்கி பணத்தை ஆட்டையை போட்டமை, பொதுசன மாதாந்த பணத்தை ஊழல் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த குடத்தனை உபதபாலகர் 2018 ம் ஆண்டிற்க்கு முன்னர் பணியிலிருந்த போதே குறித்து ஊழல்களை மேற்கொண்டுள்ளார் என்றும இதனால் அக்காலப் பகுதயில் மக்களிற்க்கு பதில் கூற முடியாது தனது பதவியிலிருந்து சுய விருப்பில் நிரந்தரமாக விலகியதுடன் கடமைக்கு வருகை தரவில்லை என தபால் திணைக்களத்தால் பணி நிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சத்தம் ஏதுமின்றி குறித்த உபதபாலகர் பணியில் இணைக்கப்பட்டார்.

இதன அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க இரு தரப்புக்களுடனும் பேசி குறித்த தபாலகர் குறித்த தபாலகத்திறக்கு கடமைக்கு சமூகமளிக்க மாட்டார் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்ததை  அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மறுநாள் போலீசாரின் உத்தரவையும் மீறி பணிக்கு வந்த குறித்த உபதபாலகர் மக்களால் மீண்டும் விரட்டப்பட்டார். இதனால் கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த குடத்தனை உபதபாலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் மாதாந்த பொது சன உதவிப்பணம் பெறும் முதியவர்கள் முதல் பல கட்டணங்களை செலுத்த வேண்டியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உரிய தரப்புக்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் ஏடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

 

Recommended For You

About the Author: admin