முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த, ஒல்லாந்தக் கோட்டையை போரிட்டு வெற்றி கொண்ட, வன்னியின் இறுதி மன்னன், மாவீரன் பண்டாரவன்னியனின் 219 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வுகள், முல்லைத்தீவில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில், இரு வேறு இடங்களில், நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள, பண்டாரவன்னியன் திருவுருவச் சிலையிலும், பண்டாரவன்னியன், ஒரே வாள் வீச்சில், 60 வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும், முல்லைத்தீவு – முள்ளியவளை, கற்பூரப்புல் வெளியிலும், மாவீரன் பண்டாரவன்னியனின் 219 ஆவது வெற்றி நாள் நினைவுகூரப்பட்டது.
இதன் போது, நகரில் உள்ள, பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி நினைவுகூரல் மேற்கொள்ளப்பட்டது.