2100 க்கு அதிகமான வணிகங்கள் தங்களுக்கென சொந்த எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை அமைத்துள்ளதாகவும் மற்றும் பலவற்றை அனுமதியின்றியும் அமைத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உரிமம் இல்லாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிகங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை விநியோகிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், 1250க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், அத்தியாவசிய நுகர்வோருக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்றுமதி வணிகங்கள் எரிபொருளுகான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் செலுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், வணிக நிறுவனங்களுக்கு பெற்றோல் வழங்கப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.