காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான சேனாதி குருகே எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
காலிமுகத்திடல் பேராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளரும் போராட்டத்தின் தேசிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளருமான சேனாதி குருகே, மத்திய குற்றவியல் விசாரணை அலுவலகத்தினரால் நேற்று(24) கைது செய்யப்பட்டதுடன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர் மீது, போராட்டக்களத்தில் இரண்டு இராணுவத்தினரைக் கடத்திச் சென்று தாக்குல் மேற்கொண்டதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.