முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்குநியமிக்கப்பட வேண்டும் என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த கட்சியில் உயர் பதவியொன்றினை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும்,எதிராகவும் இரண்டு குழுக்கள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.