இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்திற்கமைய ஒழுங்கு செய்யப்பட்ட கடற்கரையோரங்களிலிருந்து பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் சிரமதானப் பணிகள் மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வழிநடத்தலில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலோடு இயற்கையைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேச இளைஞர் யுவதிகள் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சர்மிலா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரையோர துப்புரவாக்கல் சிரமதானப்பணியின்போது பெருந்தொகையான பிளாஸ்ரிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சர்மிலா எதிர்கால சந்ததிக்கு இயற்கைச் சூழலை அசிங்கப்படுத்தாமல் அழகுபடுத்திக் கையளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்