கோட்டாபயவின் வழியை பின்பற்றவும் – ரணிலிடம் நேரில் வலியுறுத்து

இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ செய்தது போன்று தமக்கான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு நியமிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் பெருமளவில் குறைக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று கடந்த வாரம் அதிபர் செயலகத்தில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் அதிபரிடமிருந்து குறிப்பிட்ட பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது மேலும் முப்பது இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் அந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin