2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய,மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவன் இசார லக்மால் ஹீன்கெந்த கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன ஆங்கில மொழியில் தேர்வெழுதி வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுடன்,உயிரியலில் பிரிவில் அமாஷா நிஷாமணி நாடளாவிய ரீதியில் பகுதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கல்விப் பொதுச் சான்றிதழ் A தரம் 2121 பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் இந்த எண்ணிக்கை 62.9 வீதமாகும் என்றும் திணைக்களம் கூறுகிறது.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 37 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 12 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட 49 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் முறைமை மற்றும் காலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.