விமானத்தில் அறிமுகமான நபரிடம் 2 வயதான மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண்ணை இன்று காலை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி உடுகமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுனேத் சாந்தவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை நடத்தியதுடன் பெண் அவரது வீட்டில் இருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளதுடன், அவருக்கு பிள்ளைகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின்னர், களுத்துறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால், தான் வந்த வாடகை வாகனத்தில் பெண்ணையும் பிள்ளையும் களுத்துறைக்கு அழைத்து வந்தாக முறைப்பாடடாளர் தனது முறைப்பாட்டில் கூறியிருந்தார்.
கட்டுநாயக்கவில் இருந்து களுத்துறை நகருக்கு வந்த பின்னர் குளிர்பானம் மற்றும் இனிப்புகளை வாங்கி வருவதாக கூறி, பிள்ளையை தன்னிடம் ஒப்படைத்து விட்டு வாகனத்தில் இருந்து இறங்கி சென்ற பெண் பல மணி நேரம் கடந்தும் திரும்பி வரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.