இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பல பேக்கரிகள் மூடப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்தநிலையில், சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மொத்த விற்பனை சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலைமையின் கீழ் நாடளாவிய ரீதியில் 2,000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.