யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.பி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் பீ.சி.ஆர் மாதிரிகளும் யாழ்ப்பாணத்தில் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதியானது.
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 14 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேர்,அளவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் 23 பேர்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், வவுனியா வடக்கில் 07 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஐவர் (பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது)
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.