கண்ணுக்கு முன்னால் நடந்த இனப்படுகொலையை மாற்ற நினைக்கிறது உலகு….!சர்வதேச குற்றங்கள் நூல் ஆசிரியர் ஸ்ரீ ஞானஸ்வரன்.

எமது இனத்தின் மீது கண்ணுக்கு முன்னால் நடத்தப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச உலகு  மாற்றக் கூடாது என்பதற்காகவே நாங்கள் பேசுவதற்காக சர்வதேச குற்றங்கள் என்ற நூலை எழுதினேன் என நூலாசிரியர் கலாநிதி ஸ்ரீ ஞானஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சர்வதேச குற்றங்கள் நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் இனப்படுகொலை என்றால் என்ன என்பதை ஆழமாக அறிவதற்கு கயேந்திரகுமார் பொன்னம்பலம் உதவினார்.
அதே போல்  இன்னொரு அரசியல்வாதியும் இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு பற்றி ஆராய்ந்து எழுதுவதற்கு எனக்கு வழி ஏற்படுத்தினார்.  அந்த அரசியல்வாதி குறிப்பிடும் போது இலங்கையில இடம் பெற்ற இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்றார் அதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இனச் சுத்திகரிப்புதான் என கூறினார்.
நான் எனது புத்தகத்தில் தெளிவாக இன  சுத்திகரிப்பை பற்றி கூறியிருக்கிறேன். அதாவது ஒரு தூய தேசத்தை உருவாக்குவதற்கு ஒரு அமைப்பு நீண்ட கால அடிப்படையில் இன அழிப்பைச் செய்ய முனைகின்றன. முதலாவது படி முறை தான் இனச்சுத்திகரிப்பு.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியைச் சேர்ந்த யூதர்களை அளித்த போது பிரித்தானிய பிரதமர் வின்சன் சேச்பெல் கூறும் போது நாங்கள் ஒரு குற்றத்தின் முன்னால் நிற்கிறோம் அக் குற்றத்தின் பெயர் தெரியாமல் நிற்கிறோம் என கேள்வி எழுப்பினார்.
அதேபோல் எமது இனத்தின் மீது நடாத்தப்பட்ட குற்றத்தினை நாங்கள் தான் பேச வேண்டும் அப்போதுதான் குற்றம் என்ன என்பது வெளி உலகத்திற்கு செல்லும். அறிஞர் பிரான்சன் கூறிய இனப்படுகொலை தொடர்பில் எட்டு படிநிலைகளை எனது சர்வதேச குற்றங்கள் என்ற நூலில் விரிவாக கூறியுள்ளேன்.
அதை லெட்டாவது படிநிலை இனப்படுகொலையை நிகழ்த்திய அரசு அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை அதே போல் இனப்படுகொலையை நிகழ்த்திய அரசு அரியணையை விட்டு போகப்போதுமில்லை. ஆகவே மணி கட்டுபவர் அச்சமடைய வேண்டிய தேவை உள்ளது.
அதனால் அச்சத்தை எதிர் நோக்க போகிறோம் என நினைத்தால் எமது இனம் இன்னும் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews