சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் 51% பெரும்பான்மை பங்குகள் அரசாங்கத்திடம் தக்கவைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” பல ஆண்டுகளாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இது திறைசேரிக்கு சுமையாக உள்ளது. தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் மேலும் நஷ்டத்தை சந்தித்தது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகளவில் கடந்த ஆண்டு விமானத் துறையின் திறன் சுமார் 60% முதல் 80% வரை குறைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் 2020/21 நிதியாண்டில் 70% வருமான இழப்பை சந்தித்தது. சிறிலங்கன் எயார்லைன்ஸின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும், இது இலங்கையில் 401 பில்லியன் ரூபாய்கள்”, எனக் குறிப்பிட்டார்.