இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாரிய ஆசன மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த எழுச்சியுடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் எண்ணிக்கையில் கணிசமான மாற்றம் ஏற்படும் என அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் அறியமுடிகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.