முன்னாள் அதிபர் கோட்டாபயவின் நெருங்கிய நண்பர்களாக ஒரு காலத்தில் இருந்த இருவர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து முன்னாள் அதிபரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு கூட பதிலளிப்பதில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்த இருவர், முன்னாள் அதிபர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் இருந்தபோதும் அவர் தங்கியிருந்த விடுதிகளுக்கான செலவுகளை செலுத்தியவர்கள் என்றும் கூறப்படுகிறது.
எனினும் தற்போது, இவர்கள் இருவரும் பாங்கொக்கில் இருந்து கோட்டாபயவின் அழைப்புகளை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
கொழும்பில் இடம்பெற்ற மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய, முதலில் சிங்கப்பூருக்கும் பின்னர் மாலைதீவிற்கும் அதனையடுத்து தற்போது தாய்லாந்திலும் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.