கொழும்பிற்க்கு கடத்துவதற்காக நயினாதீவிலிருந்து கொண்டு வந்த 8.5 கிலோ கஞ்சாவுடன் யாழ்.நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான போலீஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் செயற்படும் பொலிஸ்பரிசோதகர் மேனன் தலைமையிலான போலீஸ் அணியினரால் குறித்த கைது சம்பவ இடம் பெற்றுள்ளது.