நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியன் தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதனால் எதிர்வரும் நாட்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா கூறுகையில்,
எதிர்வரும் நாட்கள், நாட்டில் தேங்காய் விளைச்சல் குறைவான காலப் பகுதி என்பதனால் சந்தைக்கு போதியளவு தேங்காய் நிரம்பல் செய்ய முடியாத நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.