கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பாணின் விலை 300 ரூபா வரை உயரும் என அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக 13500 ரூபாவுக்கு விற்கப்பட்ட கோதுமை மா கறுப்பு சந்தையில் 20000 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.
கோதுமை மா விநியோகிக்கும் இரண்டு நிறுவனங்களான பிரிமா மற்றும் செரண்டிப் ஆகியவை தற்போது 25 வீதத்தையே வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
டொலர் பற்றாக்குறை காரணமாக முழுமையான அளவு மாவையும் வழங்காது ஒருதொகுதி மாவை மட்டுமே வழங்குகின்றனர்.
இதன் காரணமாக 200 வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பாணின் விலை 300 ரூபா வரை உயரும் என அவர் தெரிவித்தார்.